Sunday, 25 August 2013

வாலி




கூற்றுவனும் போட்டானே
நல்லுரைக்கும் உறை
எங்கு இடுவேன்
நானும் முறை
தவிக்குதே இதயத்தின்
அகம் நான்கு அறை

நீர் வாலி தான்
அன்பால் பலர்அகம் வென்ற வாலிதான்
கண்டேனே உமதெழுத்தில் புலிப்பாய்ச்சல்
கொண்டேனே நானும் காய்ச்சலும் கிறுக்கவே

உமது வாக்கு சுத்தம்
பலிக்கும் நித்தம்

போதுமே அறியவும் உமையே
நினைவு நாடாக்கள் -

ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் நீவீரும்
கொண்டாய் நாமம் வாலி
ஓவியன் மாலியை மனதில் கொண்டு

உமது வம்சம் அரங்கன் புகழ் பாட
முருகுவே உருவான
தண்டபாணி மேல் கொண்டீர் பற்று

உன்னப்பன் முருகும்
கொண்டானோ முருகுமை
கற்பனையில் காவியமாய்
அந்நாதன் நாமுமும் வடித்தீரே

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும் - என

அவதார புருஷனில் - ஓர்
அவதாரம் எடுத்தாய்

கண்டும் கொண்டேன் எழுத்திலுமே
அவதார நாயகனை

பாண்டவர் பூமியிலே
ஐவரையும் ஆண்டவன் நீ

எழுத்திலே நிறைகுடமாய்
விஸ்வரூபம் எடுத்த வேந்தன் நீ

மானசீகமாகவே
எமக்கும் குருவானவரே
உமதெழுத்தினால்
எமக்கு தருவானரே

உமை கண்டே
மையலும் கொண்டேன்
எண்ணங்களை வடிக்கவே
பிழையும் இருந்தால்
அடியேன் எமை பொறுத்தருள்க

நீங்கினாய் மண்ணில்
ஏறினாய் விண்ணில் -
எனினும் மானசீகமாக
இருக்கிறீர் என்னில்

மண் இருக்கும் வரை உன் புகழ் இருக்கும்
என் உயிர் இருக்கும் வரை என் அகம் இருப்பீர்

வாலி நீர் என்றென்றும் வாலி நீர்
வாழி நீர் என்றென்றும் வாழும் உன் நாமம்

பணிகிறேன் அண்ணலே
தருவீர் ஆசியும்

Rs Av




No comments:

Post a Comment