Tuesday 10 September 2013

தர்மம் வெல்ல தலை கொடுத்த கர்ணன்

குருஷேத்ரகளம்
எங்கும் இரத்தமயம்

பங்காளி இங்கு
ஆனான் பகையாளி

அண்ணனை வீழ்த்தினான்
இளவலும் கண்ணனின் துணையுடன்

குந்தியின் தலைமகன்
தர்மத்தின் காவலன் கர்ணனும்
வீழ்ந்தான் ஒருகணம்

பிரியவில்லை உயிரும்
காத்திருந்தாள் தர்மதேவதையும்

செய்த தர்மம்
கர்ணன் தலைகாக்க

தர்மம் வெல்லவே
கண்ணனும் பூண்டான்
மாறுவேடமும்

யாசித்தான் பரந்தாமன்
குந்தியின் தலைமகனிடம்

வேண்டினான் கர்ணனும்
இருப்பதைக் கேட்டு
நிறைவு கொள்கவென்று

நீலவண்ணனும் யாசித்தான்
தர்மத்தின் பலனை

தாரை வார்த்தான் சூரியமைந்தன்
பலனனைத்தும் சங்குசக்ரதாரிக்கு

மறுகணம் காட்டினான்
விஸ்வரூபம் கண்ணனும்

பெரும்பேறு பெற்றான்
கர்ணனும் அக்கணமே

இளவல் பார்த்தனும்
விட்டான் பாணமும்

மறுகணம் நீங்கினான் மண்ணிலே
ஏறினான் விண்ணிலே கர்ணனும்

தர்மம் வெல்ல
கர்ணனும் தலைகொடுத்தான்

தீர்த்தான் துரியோதனுக்கு
செஞ்சோற்றுக்கடனும்

இலக்கணம் அவனே
நட்புக்கு நாயகன் அவனே


Rs Av

Monday 26 August 2013

மண்ணரசி ஈன்றெடுத்த
பெண்ணரசி

பூதேவி ஈன்ற
சீதேவி

சூரியனும் சுட அஞ்சும்
மாதரசி

இருந்தாள் ஓர்
அசோக வனம்
எனினும் ஆனது
சோக வனம்

புல்லுமே நடுங்கியது
அனுமதியின்றி தீண்டவே

கள்ளுண்ட இராவணனும்
நெருங்கிடவே அஞ்சினான்

மந்தியவன்
வாயுவின் வம்சமவன்

அஞ்சாது நெருங்கினான்
அன்னையை

பாடினான் ராமநாமமும்
தேவியவள் மகிழவே

காட்டினான் கணையாழி
தேற்றினான் அன்னையையும்

பெற்றான் தேவியிடம்
நெற்றிச்சுட்டியும்

பணிந்தான் அவள் பாதம்
காட்டினான் சிறு வீரம்

விஸ்வரூபம் எடுத்தான்
மரங்களை வேரோடு அழித்தான்

அன்னையும் கொண்டாள்
சிறு ஊக்கமும்

ஆசியும் வழங்கினாள்
அன்புடன் அன்னையும்

சிரஞ்சீவியவனும்
சிரம்சீவினான் இராக்கதரை

விதை பெற்றும் கொண்டான்
விண்ணிலும் ஏறி வந்தான்

அண்ணலையும் கண்டான்
இங்ஙனமே சொன்னான்

"கண்டேன் சீதையை"
செப்பினான்
அஞ்சனை மைந்தனும்

சேதி கேட்ட கணமே
விழி நீரும் சொரிய

தழுவினான் மார்போடு
வாயுவின் புத்திரனையும்

ஏற்றம் கொண்ட இராமனும்
பணித்தும் விட்டான் சேனையை

கட்டவே பாதையும்
ஆழிக்கடல் மீதிலே

செப்பவும் வேண்டுமா
அண்ணலும் செய்ததை

இராவணனை
இராவணம் செய்தான்
இராவணன்

(மேற்காணும் இம்மூவரிகள் எனதாசான் வாலியின் பொன்வரிகள்)

அண்ணலுக்கும் ஏற்றம் தந்தான்
அன்னைக்கும் மகிழ்வு தந்தான்
அஞ்சனை கர்ப்பத்தில் உதித்த
வாயு புத்திரன் மாருதி

******************************
அவன் தாழ் பணிவோம்
ஏற்றமும் கொள்வோம்

ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புற்ற நமஸ்துதே

ஜெய் ஹனுமான் பாஹிமாம்
ஜெய் ஹனுமாம் ரட்ஷமாம்

Rs Av


என்னவென்று சொல்ல


இன்னதென்று இல்லை
என்னவென்று கூற
உந்தனன்பை சொல்ல
வரிகளொன்றும் இல்லையே

உயிர் துளிர்த்தது அன்பில்
பல வடிவெடுத்தாய் என்னில்

காணும் யாவும் உன் பிம்பம்
மனம் லயித்தது அதில் இன்பம்

விழி மூடினால் நீயே
அகத்திலும் கூவினாய்
குயில் போலவும் நீயே

நாளங்களும் மீட்டின
உன் நாமமே வீணையின் தந்தியாய்

செல்லவும் மறுக்குதே
வேறெதிலும் மனமுமே

விடுக்கிறேன் தூதுமாய்
தென்றலை இக்கணம்

தந்தியாய் பாவியே
விரைவாய் நீ என்னிடம்

உன்னவன்
இவண்
Rs Av

https://www.facebook.com/AnbenumNadhiyinile

http://anbenumnadhiyinile.blogspot.in

Sunday 25 August 2013

வாலி




கூற்றுவனும் போட்டானே
நல்லுரைக்கும் உறை
எங்கு இடுவேன்
நானும் முறை
தவிக்குதே இதயத்தின்
அகம் நான்கு அறை

நீர் வாலி தான்
அன்பால் பலர்அகம் வென்ற வாலிதான்
கண்டேனே உமதெழுத்தில் புலிப்பாய்ச்சல்
கொண்டேனே நானும் காய்ச்சலும் கிறுக்கவே

உமது வாக்கு சுத்தம்
பலிக்கும் நித்தம்

போதுமே அறியவும் உமையே
நினைவு நாடாக்கள் -

ஸ்ரீரங்கத்து ரங்கராஜன் நீவீரும்
கொண்டாய் நாமம் வாலி
ஓவியன் மாலியை மனதில் கொண்டு

உமது வம்சம் அரங்கன் புகழ் பாட
முருகுவே உருவான
தண்டபாணி மேல் கொண்டீர் பற்று

உன்னப்பன் முருகும்
கொண்டானோ முருகுமை
கற்பனையில் காவியமாய்
அந்நாதன் நாமுமும் வடித்தீரே

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும் - என

அவதார புருஷனில் - ஓர்
அவதாரம் எடுத்தாய்

கண்டும் கொண்டேன் எழுத்திலுமே
அவதார நாயகனை

பாண்டவர் பூமியிலே
ஐவரையும் ஆண்டவன் நீ

எழுத்திலே நிறைகுடமாய்
விஸ்வரூபம் எடுத்த வேந்தன் நீ

மானசீகமாகவே
எமக்கும் குருவானவரே
உமதெழுத்தினால்
எமக்கு தருவானரே

உமை கண்டே
மையலும் கொண்டேன்
எண்ணங்களை வடிக்கவே
பிழையும் இருந்தால்
அடியேன் எமை பொறுத்தருள்க

நீங்கினாய் மண்ணில்
ஏறினாய் விண்ணில் -
எனினும் மானசீகமாக
இருக்கிறீர் என்னில்

மண் இருக்கும் வரை உன் புகழ் இருக்கும்
என் உயிர் இருக்கும் வரை என் அகம் இருப்பீர்

வாலி நீர் என்றென்றும் வாலி நீர்
வாழி நீர் என்றென்றும் வாழும் உன் நாமம்

பணிகிறேன் அண்ணலே
தருவீர் ஆசியும்

Rs Av




Friday 23 August 2013

நட்பு

எண்ணங்களை வார்த்தேன்
உயிரை சேர்த்து
தமிழை தோய்த்து
வடித்தேன் சொச்சம்
தமிழுக்கு நன்றி
உறவை தந்ததற்கு

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு நட்பு காட்டும் புதுஉலகம்

நட்பிற்கு உயிர்
மண்ணிற்கு உடல்

Urs
Rs Av
 




முக்காலம்

பிறந்தேன் நேற்று
உயிர்த்தேன் இன்று
மரிப்பேன் நாளை

முக்காலம் மூன்றில்
இடைக்காலம் வருவாய்

தருவாய் நீயும்
அடைக்கலம்

ஆகும் நெடுங்களம்
சிறுகுளம்
பெறுவேன் நானும்
பிறவிப்பயன்

ஆகும் சுகமாய்
கைப்பிடி மனம்
கனமும் கணத்தில்
இறகாகும்
கடப்பேன் நானும்
எளிதாக

மூன்றாம் காலம்
நெருங்குதே கண்ணே
சருகாகும் முன்னே
காத்திடுவாய் பெண்ணே

இடைக்காலத்தில் இனியவளை நோக்கி
இவண்
Rs Av